Home இந்தியா கும்ப மேளா: ‘3 கோடி’ பக்தர்கள் புனித நீராடுகின்றனர்

கும்ப மேளா: ‘3 கோடி’ பக்தர்கள் புனித நீராடுகின்றனர்

712
0
SHARE
Ad

Kumba-mela---Slider

யமுனா, பிப்.10- இந்தியாவில் மஹா கும்ப மேளா பண்டிகையின் முக்கிய நீராடல் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் மூன்று கோடி பக்தர்கள் புனித நீராடினார்கள் என்று மதிப்பிடப்படுகின்றது.

6 நீராடல் நிகழ்வுகளைக் கொண்ட மஹா கும்ப மேளா நிகழ்ச்சிதான் உலகின் மிகப் பெரிய மனித ஒன்று கூடல் என்று வர்ணிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

கும்ப மேளா ஆரம்பமான ஜனவரி 14ஆம் தேதியன்று 80 லட்சத்துக்கும் அதிகமானோர் நன்னீராடினார்கள்.

புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் குளித்தால் பாவங்கள் கழியும் என்றும் விமோச்சனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற இந்த மஹா கும்ப மேளா ஜனவரியிலும் பிப்ரவரியிலுமாக 55 நாட்கள் காலத்துக்கு நடக்கிறது.

இந்த காலப் பகுதியில் 10 கோடிப் பேர் இவ்விடங்களில் புனித நீராடியிருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.

தவிர 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற ஒரு விசேஷ கும்ப மேளா இது என்பதும் குறிப்பிடத்தக்கது.