Home நாடு தெக்குன் கடனுதவி சிறு நடுத்தர வியாபாரிகளை தொழில் முனைவர்களாக உருவாகியுள்ளது – பிரதமர்...

தெக்குன் கடனுதவி சிறு நடுத்தர வியாபாரிகளை தொழில் முனைவர்களாக உருவாகியுள்ளது – பிரதமர் தகவல்

973
0
SHARE
Ad

4

கோலாலம்பூர்,பிப்.10-  தெக்குன் கடனுதவித் திட்டத்தின் வழி இந்திய சமுதாயத்தினரை சிறந்த தொழில் முனைவர்களாக உருவாகியுள்ளது.  இந்த கடனுதவியை அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி அடையும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

மூவின மக்களும் பொருளாதார  ரீதியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் தெக்குன் கடனுதவித் திட்டம்.

#TamilSchoolmychoice

தொழில் நுட்பம் நிறைந்த இக்காலத்திற்கேற்ப சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும்  புதிய பாணியை கண்டறிந்து முன்னேற வேண்டும் என்ற  நோக்கில் தான் சிறு – நடுத்தர வர்ததகம் செய்பவர்களுக்கு இக்கடனுதவித் திட்டம் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

சிறுதொழிலாக இருந்தாலும், தரமானதாக இருக்க வேண்டும் என்பதோடு நாடு முழுவதும்  வியாபாரத்தை பரப்ப இக்கடனுதவி மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

புத்ரா அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெற்ற தொழில் முனைவர் மாநாட்டில், தெக்குன் கடனுதவித் திட்டத்தின்  நிறைவு நாளில் கலந்து கொண்ட பிரதமர் தமதுரையில் மேற்கண்டவாறு  கூறினார்.

15ஆவது ஆண்டை அதிகாரப்பூர்வமாக  நிகழ்வையும் தொடக்கி வைத்த பிரதமர் அவர்கள், சிறந்த தொழில் முனைவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தொழில்  முனைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேரில் 2 இந்தியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.