கோலாலம்பூர்,பிப்.10- பிரதமர் பதவிக்காக சிறுபான்மை இனங்களிடமிருந்து கையேந்தும் பிச்சைக்காரர்கள் அம்னோ – பாஸ் – பி.கே.ஆர். கட்சியினர் ஆகி விட்டார்கள் என்று மகாதீர் வர்ணித்துள்ளார்.
அவ்வாறு சிறுபான்மையினரிடம் கையேந்தும் போது அரசியல் ரீதியாக அவர்கள் வலுபெற்றவர்களாக விடுவதோடு, மலாய்க்காரர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டு கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் மலாய்க்காரார்கள் ஒற்றுமையுடன் இருந்தனர். ஆனால் இன்று பிளவுப்பட்டுள்ளனர். அப்பொழுது அம்னோவின் கீழ் மலாய்க்காரர்கள் ஐக்கியமடைந்திருந்தனர். அவர்களின் ஒற்றுமையைப் பார்த்து பிரிட்டிஷ்காரர்கள் பயந்தனர்.
ஆனால், இன்று அந்த நிலைமை மாறி, பதவிக்காக கையேந்தும் நிலைக்கு வந்து விட்டோம் என்றார் மகாதீர்