Home அரசியல் நீங்கள் 100 வருடம் வாழ வேண்டும் – மகாதீருக்கு கிட் சியாங் பதிலடி

நீங்கள் 100 வருடம் வாழ வேண்டும் – மகாதீருக்கு கிட் சியாங் பதிலடி

541
0
SHARE
Ad

Lim-Kit-Siang1கோலாலம்பூர், நவ 9 –  ஓய்வு பெறுவது குறித்த மகாதீரின் கருத்துக்கு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், தான் சாக வேண்டும் என்று மகாதீர்  விரும்புவதாகவும் ஆனால் மகாதீர் நீண்ட காலம் வாழ தான் பிரார்த்தனை செய்வதாகவும் லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.

“மகாதீருக்கு தற்போது 88 வயதாகிறது அவர் இன்னும் 12 வருடங்கள் வாழ்ந்து 100 வயதை அடைந்த பின்னர் மகாதீரிசம் ஒரு முடிவிற்கு வர வேண்டும்” என்றும் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“மகாதீர் நான் சாக வேண்டும் என்று விரும்புகிறார். அதனால் தான் 13 வது பொதுத்தேர்தலில் கேலாங் பாத்தா தொகுதியில் பிரச்சாரம் செய்து எனது அரசியல் வாழ்விற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார்.”

“ஆனால் அந்த அபாயத்தை எதிர்க்கொள்ள நான் தயாரானேன். நான் 2008 தேர்தலில்  21,000 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற்ற ஈப்போ தீமோர் தொகுதியை விட்டு கேலாங் பாத்தா தொகுதியில் துணிச்சலாகக் களமிறங்கினேன்.”

“மே 5 பொதுத்தேர்தல் அன்று இரவு மகாதீர் தோற்றார். நான் வென்றேன். மகாதீர் ஒரு தவறான தலைவர் என்பதையும், அவர் நான் போட்டியிட்ட கேலாங் பாத்தா தொகுதியில் சீனர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களுக்கிடையே இனவேறுபாட்டை ஏற்படுத்த ஏற்படுத்த பல பொய்களையும், தவறான பரப்புரைகளையும் செய்தார் என்பதையும் நிரூபித்தேன்” என்று லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

சுங்கை  லிமாவ் இடைதேர்தல் முடிவு அறிவித்து பாஸ் கட்சி வெற்றியடைந்தது முதல் மகாதீரும், லிம் கிட் சியாங்கும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

லிம் கிட் சியாங் குறித்து நேற்று கருத்துரைத்த மகாதீர், “எப்போது கிட் சியாங் ஓய்வு பெறுவார்? இறந்த பின்பா? ஓய்வு பெற்றாலும் ஜசெக மூத்த தலைவராகவே தான் இருப்பாரா?” என்றும் மகாதீர் கேள்வி எழுப்பினார்.