Home உலகம் போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டு விசாரணைக்கு தயார் என்கிறார் ராஜபக்சே

போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டு விசாரணைக்கு தயார் என்கிறார் ராஜபக்சே

467
0
SHARE
Ad

rajapaksa 300-200

கொழும்பு, நவம்பர் 15 – ‘விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது நடந்த குற்றங்கள் குறித்த குற்றச் சாட்டு குறித்த விசாரணைக்கு தயார், “ எங்களிடம் மறைக்க ஒன்றுமில்லை” என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கையின் கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு இன்று துவங்குகிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை  அமைச் சர் சல்மான் குர்ஷத் கலந்து கொள்கிறார்.

#TamilSchoolmychoice

கடந்த 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமை மீறல் குற்றங்களில் இலங்கை ராணுவம் ஈடுபட்டதாக பல வகையில் பகிரங்க குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி ஐநா மனித உரிமை ஆணையமும் விசாரித்து வருகிறது.

போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை  அதிபர் ராஜபக்சேவை ஐநா ஆணையத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. மாநாட்டிலும் இந்த விவகாரம், பெரிய  அளவில் எழுப்பப்படும் என்று தெரிகிறது. கனடா, மொரீஷஸ் போன்ற நாட்டு தலைவர்களும் பங்கேற்கவில்லை. பிரிட்டன் பிரதமர் கேமரூன் இந்த மாநாட்டில் போர்க்குற்றங்கள் குறித்து பிரச்னை கிளப்புவார் என்று தெரிகிறது.

இந்த நிலையில், கொழும்புவில் ராஜபக்சே நிருபர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எந்த வகையான குற்றங்களும் நடக்கவில்லை. மனித உரிமை மீறல்களும் இல்லை. நாங்கள் எதையும் மறைக்கவில்லை. நிர்வாக முறைகளை நாங்கள் கடை பிடிக்கிறோம். அதனால் எந்த மீறல்களும் உடனே அதற்கான மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் செய்யலாம். அது உடனே விசாரிக்கப்படுகிறது.

40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டன் பிரதமர் கேமரூன் குற்றம்சாட்டியுள்ளது பற்றி நான் அவரை சந்தித்து பேசி விளக்கம் தர தயாராக உள்ளேன். நாங்கள் எதையும் மறைக்க தயாரில்லை. கேமரூனிடம் நாங்களும் கேட்க சில கேள்விகளை வைத்துள்ளோம். எங்களிடம் சட்ட முறைகள் உள்ளன. அதன்படி மனித உரிமை மீறல் தடுப்பு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் யாராவது மனித உரிமை மீறலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்று புகார் வந்தால் தாராளமாக தெரிவிக்கலாம். நாங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். தமிழ் அமைப்புகளுக்கு நான் சொல்வது ஒன்று தான்; அவர்களுடன் நேரடியாக பேச தயாராக இருக்கிறேன். இவ்வாறு ராஜபக்சே கூறினார். திரைக்காட்சி (சேனல் 4) வீடியோ காட்சிகள் பற்றி கேட்டபோது அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.

மேலும், இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் வராதது பற்றி வருத்தமில்லையா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘மன்மோகன் வரவில்லை என்பது வருத்தமில்லை; அவர் சார்பில் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி தான். என்றார். தமிழகம் எதிர்ப்பு காரணமாக தான் வரவில்லை என்று சொல்லப்படுகிறதே என்று கேட்டபோது, அப்படி ஒரு காரணம் சொல்லப்படவில்லையே’ என்று தெரிவித்தார் ராஜபக்சே.