Home வாழ் நலம் முகத்தில் கரும்புள்ளிகளை நீக்க இயற்கை வழிகள்!

முகத்தில் கரும்புள்ளிகளை நீக்க இயற்கை வழிகள்!

678
0
SHARE
Ad

28-1364456107-acne

கோலாலம்பூர் , நவம்பர் 15- ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் சிக்கனமாகவும், நம்மை அழகுப்படுத்திக் கொள்ளலாம். கரும்புள்ளிகள் பெரும்பாலும் முகத்தில் தான் தென்படும். பெரும்பாலும் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில் தான் தென்படும். இந்த கரும்புள்ளிகள் பருக்களாக மாறும்.

ஆகவே ‘வரும் முன் காப்போம்’ என்னும் பழமொழிக்கேற்ப, அவை பருக்களாக மாறும் முன், சரியான சிகிச்சைகளை மேற்கொண்டால், நிச்சயம் அந்த கரும்புள்ளிகளை போக்குவதோடு, சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

#TamilSchoolmychoice

1. கருப்பு மற்றும் பச்சை நிறப் புள்ளிகள் இல்லாத உருளைக்கிழங்கை எடுத்து கொண்டு அதை சீவிக் கொள்ளவும். பின்பு அதனை கரும்புள்ளிகள் மீது 15 நிமிடங்கள் தேய்க்கவும். காய்ந்த பின்பு முகத்தை கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 2 நாள்கள் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

2. எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினால் கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம்.

3. ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதனை மூக்கிலும், கன்னத்திலும் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமின்றி இந்த கலவை சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும்.

4. 2 மேஜை கரண்டி தயிருடன், 2 மேஜைகரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் மீது தடவி 10 நிமிடங்கள் காய விடவும். பின்னர் முகத்தை அலம்பவும். இது நல்ல பலனைத் தரும். இதை வாரம் ஒரு முறை செய்யலாம்.

5. சிறு துளி ஆலிவ் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகித்தால், அது கரும்புள்ளிகளை நீக்கும். அதற்கு இதனை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவி சில நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் முகத்தை அலம்பவும்.