Home இந்தியா குர்ஷித் குரல் கொடுப்பாரா? கருணாநிதி கேள்வி

குர்ஷித் குரல் கொடுப்பாரா? கருணாநிதி கேள்வி

465
0
SHARE
Ad

salman-kurshid

சென்னை, நவம்பர் 16-  ‘இலங்கை ராணுவத்தினர் நடத்திய பாலியல் கொடுமைகள் குறித்து, காமன்வெல்த் மாநாட்டில் குரல் கொடுக்க வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் முன் வருவாரா?’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை, இந்தியா மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளும் புறக்கணிக்க வேண்டும். இலங்கை சென்றிருக்கும் சல்மான் குர்ஷித், இலங்கை ராணுவத்தினர் நடத்திய பாலியல் கொடுமைகள் குறித்து காமன்வெல்த் மாநாட்டில் குரல் எழுப்புவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.