Home 13வது பொதுத் தேர்தல் ம.இ.கா இளைஞர், மகளிர் பிரிவிகளுக்கு இன்று தேர்தல்!

ம.இ.கா இளைஞர், மகளிர் பிரிவிகளுக்கு இன்று தேர்தல்!

575
0
SHARE
Ad

MIC-Logo-Sliderகோலாலம்பூர், நவ 16 – ம.இ.கா இளைஞர் மற்றும் மகளிர் பிரிவின் தலைமைத்துவ பதவிக்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்த தேர்தல் முடிவுகள் தான் வரும் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள ம.இ.கா தலைமைத்துவப் பதவிகளுக்கான முன்னோட்டமாக அமையும்.

மகளிர் பிரிவுத் தலைவி பதவிக்கு மத்திய செயலவை உறுப்பினர் மோகனா முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மகளிர் பிரிவு செயலாளர் எம்.விக்னேஸ்வரி போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

அதே போல், இளைஞர் பிரிவுக்கு ம.இ.கா இளைஞர் பிரிவுத் துணைத்தலைவரான வி.முகிலனும், அவரை எதிர்த்து இளைஞர் பிரிவு பொதுச் செயலாளர் சி.சிவராஜாவும் நேரடியாகப் போட்டியிடுகின்றனர்.

இளைஞர் மற்றும் மகளிர் பிரிவிற்கான தேர்தல் முடிவுகள் குறித்து இன்று பிற்பகல் செல்லியலில் உடனுக்குடன் வெளியிடப்படும்.

அதேநேரத்தில், ம.இ.கா துணைத் தலைவர், 3 உதவித் தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான வேட்புமனுத் தாக்கலும் இன்று நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.