Home 13வது பொதுத் தேர்தல் இளைஞர், மகளிர் பிரிவை பலப்படுத்துங்கள் – பழனிவேல் வலியுறுத்து

இளைஞர், மகளிர் பிரிவை பலப்படுத்துங்கள் – பழனிவேல் வலியுறுத்து

583
0
SHARE
Ad

palanivel540px_540_361_100பெட்டாலிங் ஜெயா, நவ 16 – இன்று நடக்கும் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுக்கான தேர்தல் குறித்துக் கருத்துரைத்த ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளை பலப்படுத்த வேண்டும் என்று கட்சி உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

அதிலும் குறிப்பாக, கட்சியில் இன்னும் திறமையான இளம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பலமான போட்டி இருந்தாலும், கட்சியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, ஒற்றுமையுடன் செயல்பட்டு வாக்களிக்க வேண்டும் என்றும் கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.