Home நாடு காமன்வெல்த் மாநாடு குறித்து நஜிப் விளக்கம்!

காமன்வெல்த் மாநாடு குறித்து நஜிப் விளக்கம்!

512
0
SHARE
Ad

Najibகொழும்பு, நவ 18 – இலங்கையில் காமன்வெல்த் மாநாடு மாறாக, இலங்கை மீதான காமன்வெல்த் மாநாடு கிடையாது என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றதற்கு விளக்கமளித்துள்ளார்.

காமன்வெல்த் நாடுகளை மதிக்கும் பொருட்டு தான் இலங்கையில் நடந்த மாநாட்டில் பங்கேற்றதாகவும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஒரு காமன்வெல்த் நாடுகளின் மாநாடு.எதிர்பாராதவிதமாக இலங்கை அதை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று நஜிப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், “இலங்கையில் காமன்வெல்த் மாநாடு”,”இலங்கை மீதான காமன்வெல்த் மாநாடு” இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது” என்றும் நஜிப் கூறினார்.

இலங்கையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரை நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் மலேசிய குழுவிற்குத் தலைமையேற்று பிரதமர் நஜிப் துன் ரசாக் சென்றார்.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு இன்னும் சரியான தீர்வு கிடைக்காத நிலையில் நஜிப் அம்மாட்டில் பங்கேற்க கூடாது என்று மலேசியாவில் பல்வேறு தமிழர்  அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.