Home நாடு மகாதீர் மருத்துவமனையில் அனுமதி!

மகாதீர் மருத்துவமனையில் அனுமதி!

442
0
SHARE
Ad

Tun-Dr.-Mahathir-Mohamad1கோலாலம்பூர், நவ 18 – முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தலைநகர் தேசிய இருதய கழகத்தில் (National Heart Institute) பொதுப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மகாதீரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்பில் ஏற்பட்டுள்ள நோய் தோற்று காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மருத்துவக் குழுவினர் அவரை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அவரது உடலில் ஏற்படும் முன்னேற்றம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இன்னும் சில தினங்களுக்கு, மகாதீர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும், மருத்துவக் குழுவினர் தற்போது அவருக்கு உடற்பயிற்சிகள் உட்பட பயிற்சி அளித்து கண்காணித்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகாதீரின் குடும்பத்தினரைத் தவிர மற்ற பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.