Home உலகம் நோபல் பரிசு பெற்ற பிரபல பெண் எழுத்தாளர் டோரிஸ் லெஸ்ஸிங் மரணம்

நோபல் பரிசு பெற்ற பிரபல பெண் எழுத்தாளர் டோரிஸ் லெஸ்ஸிங் மரணம்

422
0
SHARE
Ad

549358e4-c3e9-4ddf-be6f-993e44db3e78_S_secvpf

லண்டன், நவ 18- சிறந்த இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்ற பிரபல பெண் எழுத்தாளர் டோரிஸ் லெஸ்ஸிங்(94) நேற்று மரணமடைந்தார்.

பல்வேறு தலைப்புகளில் கீழ் 55க்கும் மேற்பட்ட சிறந்த படைப்புகளை உருவாக்கிய இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கடந்த 2007ம் ஆண்டு வழங்கப்பட்டது. 22-10-1919ல் பெர்ஷியா (தற்போதைய ஈரான்) நாட்டில் பிறந்த டோரிஸ் லெஸ்ஸிங், 5 வயதில் ரொடீஷியா (தற்போதைய ஜிம்பாப்வே) நாட்டுக்கு பெற்றோருடன் குடிபெயர்ந்து 29 வயது வரை அங்கே வாழ்ந்தார்.

#TamilSchoolmychoice

ஆரம்பத்தில் கம்யூனிச சித்தாந்தங்களில் அதிக ஈர்ப்புடைய அவர் இங்கிலாந்துக்கு வந்து 1950 ஆம் ஆண்டு ‘புற்கள் சிரிக்கின்றன’ (த கிராஸ் இஸ் ஸிங்கிங்) என்ற தனது முதல் நாவலை வெளியிட்டார்.

அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளில் மிக பிரபலமான எழுத்தாளராக விளங்கிய இவர் நோபல் பரிசு நீங்கலாக இலக்கியத்துக்கான பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.