Home இந்தியா டெல்லியில் ராகுல் பேசத் தொடங்கியதும் பொதுமக்கள் எழுந்து சென்றனர்

டெல்லியில் ராகுல் பேசத் தொடங்கியதும் பொதுமக்கள் எழுந்து சென்றனர்

588
0
SHARE
Ad

M_Id_133798_Rahul_Gandhi

புதுடெல்லி, நவ 18 – நேற்று தெற்கு டெல்லியில் உள்ள தக்சின்புரியில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டமும் மக்கள் திரளாததால் பிசுபிசுத்துப் போனது. அந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலும், முதல்–மந்திரி ஷீலா தீட்சித்தும் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 4 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஆனால் மதியம் 12 மணி வரை அதில் 80 சதவீத நாற்காலிகள் சும்மாவே கிடந்தன.

#TamilSchoolmychoice

கூட்டமே இல்லாத நிலையில் முதல் மந்திரி ஷீலா தீட்சித் மட்டும் பரிதாபமாக மேடையில் உட்கார்ந்திருந்தார். மதியம் 1 மணிக்கு வயிற்று பசி காரணமாக மிச்சம் இருந்த காங்கிரஸ் தொண்டர்களும் ஒவ்வொருவராக எழுந்து செல்லத் தொடங்கினார்கள்.

உடனே முதல் மந்திரி ஷீலா தீட்சித் மைக்கை பிடித்து பேசத் தொடங்கினார். ராகுல் இப்போது வந்து விடுவார். யாரும் போக வேண்டாம் என்று சொல்லியபடி இருந்தார்.

இந்த நிலையில் மதியம் 1.45 மணிக்கு ராகுல் வந்தார். நாற்காலிகள் வெறிச்சோடி கிடந்ததை பார்த்ததும் அவருக்கு ஏமாற்றமாகி விட்டது. அதிருப்தி அடைந்த நிலையில் அவர் பேசத் தொடங்கினார்.

கூட்டம் நடந்த பகுதியில் குடிப்பதற்கு தண்ணீர் வசதி கூட செய்து வைக்கப்படாததால் ராகுல் பேச்சை கேட்க வந்திருந்த சில நூறு பேருக்கும் தாகமும் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்தது. எனவே ராகுல் பேச தொடங்கியதும் அவர்கள் ஒவ்வொருவராக எழுந்து செல்ல தொடங்கினார்கள்.

ஏற்கனவே கூட்டம் இல்லாததால் அதிருப்தி அடைந்திருந்த ராகுலுக்கும், மிச்சம் இருந்தவர்களும் நழுவிச் சென்றதை பார்த்ததும் தொடர்ந்து பேச இயலவில்லை. இதனால் அவர் 7 நிமிடங்களில் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

ராகுல் தன் பேச்சில் 3 நிமிடம் மோடியை விமர்சித்தார். 3 நிமிடம் டெல்லியில் நிறைய வளர்ச்சித் திட்டங்களை செய்யப் போவதாக கூறினார்.

10–வது நிமிடம் அவர் காரில் ஏறி புறப்பட்டுச் சென்று விட்டார். தலைநகர் டெல்லியிலேயே ராகுல் காந்தியின் பொதுக் கூட்டத்துக்கு போதுமான மக்கள் திரளாதது காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.