Home தொழில் நுட்பம் ஏசர் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய கூரோம்புக்

ஏசர் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய கூரோம்புக்

455
0
SHARE
Ad

Acer-Chromebook-C720-2848

கோலாலம்பூர், நவம்பர் 18- ஏசர் (Acer) நிறுவனம் C720-2848 எனும் தொடரிலக்கத்தினை உடைய புத்தம் புதிய கூரோம்புக் (Chromebook) கணினியினை அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

200 டொலர்கள் (ரிங்கிட் மலேசியா 640 வெள்ளி) பெறுமதியான இக்கணினியானது 11.6 அங்குல அளவு மற்றும் 1366 x 768 பிக்சல் தீர்மானம் (Pixel Resolution) உடைய திரையினைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

இவற்றில் 16 GB சாலிட் ஸ்டேட் டிஸ்க் (Solid State Disk -SSD) சேமிப்பு நினைவகம் மற்றும் பிரதான நினைவகமாக 2GB ரேம்  (RAM) ஆகியன தரப்பட்டுள்ளன.

இதேவேளை கொள்வனவு செய்யும் ஒவ்வொரு கூரோம்புக் கணினிக்கும் கூகுள் நிறுவனம் 100GB சேமிப்பு வசதியை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.