Home தொழில் நுட்பம் கூரோம்புக் உற்பத்தியில் களமிறங்கும் டெல்

கூரோம்புக் உற்பத்தியில் களமிறங்கும் டெல்

573
0
SHARE
Ad

dell_chromebook_002

கோலாலம்பூர், டிசம்பர் 12- ஏசர் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் கூரோம்புக் (Chromebook) உற்பத்தியில் ஆர்வம் காட்டிவரும் நிலையில் தற்போது டெல் நிறுவனமும் இணைந்துள்ளது.

இதன் அடிப்படையில் தனது முதலாவது உற்பத்தியான கூரோம்புக் 11 இனை வெளியீடு செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

11 அங்குல அளவு மற்றும் 1366 x 768 பிக்சல் தீர்மானம் உடைய திரையினைக் கொண்ட இச்சாதனமாது இன்டெல் செலரான் (Intel Celeron 2955U) செயலி மற்றும் பிரதான நினைவகமாக 2GB அல்லது 4GB RAM இனைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.

16GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட இதன் விலையானது 300 டொலர் ஆகும்.