Home இந்தியா நரேந்திர மோடி கூட்டத்திற்கு 10,000 டீக்கடைக்காரர்கள் அழைப்பு!

நரேந்திர மோடி கூட்டத்திற்கு 10,000 டீக்கடைக்காரர்கள் அழைப்பு!

545
0
SHARE
Ad

M_Id_384487_Narendra_Modi

மும்பை, டிசம்பர் 12- மும்பையில் நடைபெறவுள்ள நரேந்திர மோடி கூட்டத்திற்கு 10,000 டீக்கடைக்காரர்களை பாஜக அழைத்துள்ளது.

மும்பையில் டிசம்பர் 20ம் திகதி மோடியின் பிரமாண்ட பிரசாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், மும்பையைச் சேர்ந்த 10,000 டீக்கடைக்காரர்களுக்கு மோடி கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளோம்.

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே, ஆரம்ப காலத்தில் அவர் டீக்கடையை நடத்தி வந்தார் என்பதைக் குத்திக் காட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பேசி வருகின்றனர்.

இதற்குப் பதிலடியாகத்தான் இப்படி டீக்கடைக்காரர்களை கூப்பிடுகிறோம் என்றும் டீக்கடைக்காரரர்களை நாங்கள் அழைப்பது காங்கிரஸுக்கு சரியான பதிலடியாக அமையும் எனவும் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்திற்காக 5000 தனியார் பேருந்துகளை பாஜக ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இக்கூட்டத்தில் மும்பையைச் சேர்ந்த 20,000 மாணவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிய வந்துள்ளது.