Home இந்தியா தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது!

தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது!

661
0
SHARE
Ad

suntv10e

சென்னை, டிசம்பர் 12 – சிங்கப்பூர் கலவரம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை ஒளிபரப்பியதற்காக சன் தொலைக்காட்சி நிர்வாகம் சிங்கப்பூர் அரசிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் டிசம்பர் 8ம் திகதி நடந்த கலவரம் குறித்த ஒளிபரப்பப்பட்ட செய்தியில் உண்மைக்கு மாறான செய்திகளை சன் தொலைக்காட்சி தெரிவித்ததாகக் கூறி, அதன் நிர்வாகத்துக்கு சிங்கப்பூர் தூதரகம் மூலம் கண்டனக் கடிதம் அனுப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

சரியான செய்தியை வெளியிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கடிதத்தைத் தொடர்ந்து உடனடியாக தனது செய்திக்கு சிங்கப்பூர் அரசிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது சன் தொலைக்காட்சி நிர்வாகம்.

சன் தொலைக்காட்சியின் பொறுப்பாசிரியர் ஆர் உமாசங்கர் இதுகுறித்து சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், இந்த தவறான செய்திக்கு நான் பொறுப்பேற்கிறேன். பல இனங்கள் இணக்கத்துடன் வாழும் சிங்கப்பூரின் அமைதியை குலைக்க வேண்டும் என்பது சன் தொலைக்காட்சியின் நோக்கமல்ல.

மேலும் திருத்தப்பட்ட செய்தி அறிக்கை மீண்டும் டிசம்பர் 10ம் திகதி 7 மணிக்கு, அதே கால அளவுக்கு ஒளிபரப்பப்பட்டுவிட்டது என்றும் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என சிங்கப்பூர் அரசுக்கு உறுதியளிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.