Home இந்தியா விமான விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய ராகுல் காந்தி

விமான விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய ராகுல் காந்தி

499
0
SHARE
Ad

INDIA-ELECTION/

புதுடெல்லி, டிசம்பர் 12 – காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமான விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பினார். அவர் தனது சொந்த விமானம் மூலம் டெல்லி வந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

டெல்லி வந்த ராகுல் காந்தி விமானம் தரையிறங்க இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதனையடுத்து அவரது விமானம் தரையிறங்க முற்பட்ட ஓடுப்பாதையில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் மெதுவாக புறப்பட்டு கொண்டிருந்தது.

#TamilSchoolmychoice

அந்த விமானம் ஓடு தளத்தைவிட்டு முழுமையாக வெளியேறாததை கவனித்த விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ராகுல் காந்தி வந்த விமானத்தை தரையிறக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். ஓடுப் பாதை விட்டு விமானப்படை விமானம் புறப்பட்டுச் சென்ற பின்னர் ராகுல் காந்தி விமானம் தரையிறக்கப்பட்டது.

இதனால் ராகுல் காந்தி நூலிழையில் உயிர் தப்பினர். எனினும் இதுகுறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.