Home நாடு சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!

சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!

684
0
SHARE
Ad

சிங்கப்பூர், டிச 12 – சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கலவரத்திற்குக் காரணமாக இருந்த சாலை விபத்தில் இறந்த இந்திய நாட்டைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேலு என்ற நபரின் புகைப்படம் தாங்கிய பதாகையை, சம்பவம் நடந்த இடத்தில் வைத்த இரண்டு சிங்கப்பூரர்கள், நினைவுகூறும் வகையில் சில வாசகங்களையும் அதில் எழுதியுள்ளனர்.

1492233_10151822810592934_316374737_o

அந்தப் பதாகையில், “டிசம்பர் 8 ஆம் தேதி, சாலைவிபத்தில் இறந்தவரையும், அதன் பின்னர் நடந்த கலவரத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அமைதி நிலவ போராடியவர்களையும் நினைவு கூறும் வகையில் இந்த பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் தவறான அல்லது வெறுக்கும் படியான கருத்துக்களை வெளியிட வேண்டாம். இந்தப் பதாகை வரும் டிசம்பர் 17 ஆம் தேதி இங்கிருந்து அகற்றப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

1504274_10151822810707934_2083826379_o

மதிய உணவு இடைவேளையில் அங்கு வரும் பலர் அவரது புகைப்படத்திற்கு கீழே மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியையும் படங்களையும் சேனல் நியூஸ் ஏசியா சிங்கப்பூர்(Channel NewsAsia Singapore) தனது பேஸ்புக் தளத்தில் பகிர்ந்துள்ளது.

 1268346_10151822810612934_1463853687_o

 

903528_10151822810692934_669614197_o