Home உலகம் சிங்கப்பூர் கலவரம்: இந்தியருக்கு 15 வார சிறை!

சிங்கப்பூர் கலவரம்: இந்தியருக்கு 15 வார சிறை!

681
0
SHARE
Ad

singapore_riot_N2சிங்கப்பூர், பிப் 11 – லிட்டில் இந்தியாவில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி நடந்த கலவரத்தில் ஈடுபட்ட, கட்டுமானத் தொழிலாளி ஒருவருக்கு 15 வார சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் எச்சரிக்கையை மீறி கலவரம் நடந்த இடத்தை விட்டு அகலாமல் இருந்த சின்னப்ப விஜயரகுநாத பூபதி (வயது 32) என்ற அந்த நபர் நேற்று தனது குற்றத்தை நீதிபதியின் முன் ஒப்புக்கொண்டார்.

நேரடியாக கலவரத்தில் ஈடுபடாததாலும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காததாலும், வன்முறையைக் கையிலெடுக்காததாலும் அவருக்கு இந்த குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது என உதவி தலைமை மாவட்ட நீதிபதி ஜெனிஃபர் மேரி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி நடந்த பேருந்து விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இறந்தார்.

இதனால் அங்கு கலவரம் வெடித்து அந்த பகுதியில் இருந்த 400க்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதில் 43 அதிகாரிகள் காயமடைந்தனர். 24 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக, 25 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இதில் முதல் நபராக சின்னப்ப விஜயரகுநாத பூபதி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.