சிங்கப்பூர், ஜன 21 – கடந்த மாதம் சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து அங்கு பொதுமக்களின் பாதுகாப்பையும், அமைதியையும் நிலை நாட்ட காவல்துறைக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கும் தற்காலிக சட்டம் ஒன்று இயற்றப்படவுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் காவல்துறை மற்றும் பிற பிரிவுகளுக்கு போதைப் பொருட்களை கட்டுப்படுத்தவும், அதில் தொடர்புடைய நபர்களை கண்காணிக்கவும் அதிகாரம் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் துணைப் பிரதமர் டியோ சீ ஹியான் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த தற்காலிக சட்டத்தின் கால அளவு 1 வருடம் ஆகும். அதற்குள் மதுவுக்கு வழங்கப்படும் உரிமம் குறித்து விசாரணை ஆணையம் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் அமைச்சு சரியான முடிவை எடுக்கும் என்றும் டியோ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, லிட்டில் இந்தியாவில் நடந்த ஒரு விபத்து, கலவரமாக வெடித்தது. இதில் காவல்துறை வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.