Home இந்தியா சுனந்தா இறந்தது எப்படி? – பரபரப்பு தகவல்கள்!

சுனந்தா இறந்தது எப்படி? – பரபரப்பு தகவல்கள்!

568
0
SHARE
Ad

sunanda-pushkarபுதுடெல்லி, ஜன 21 – மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர்,அதிக அளவு மன அழுத்தத்திற்காக அல்பிராசோலம் எனப்படும் மருந்துகளை உட்கொண்டதால் இறந்திருக்கக் கூடும் என அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சுனந்தாவின் உடலை 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர். அவரது மரணம் இயற்கையானதல்ல, திடீர் மரணம் தான் என்று குழுவினர் கண்டறிந்தனர். மேலும் அவரது உடலில் விஷம் எதுவும் கலந்துள்ளதா அல்லது இறப்பதற்கு முன் மது அருந்தினாரா என்பதைக் கண்டறிய உடலின் பாகங்கள் ரசாயனப் பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அந்த அறிக்கையில், அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருக்கவில்லை என்றும், அதிக அளவு மருந்து தான் அவர் இறப்பிற்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே, சிறப்பு புலனாய்வு படையினர் சசிதரூர் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் சசிதரூரின் உதவியாளரும், பத்திரிகையாளருமான நளினி சிங்கிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் கிடைத்த வாக்குமூலங்கள், மருத்துவ அறிக்கைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு சுனந்தா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொண்டதால் இறந்தாரா? அல்லது தற்கொலை நோக்கத்துடன் அதிக மாத்திரைகள் எடுத்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.