கோலாலம்பூர், ஜன 21 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஜப்பான் நாட்டில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையில் அரசாங்கத்தின் தலையீடு இருப்பதாகக் கூறப்படுவதை விஸ்மா புத்ரா மறுத்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அனீபா அம்மான்(படம்) நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஜப்பான் அரசாங்கத்தின் கூற்றுப்படி, தடை விதிக்கப்பட்டதற்குக் காரணம், அன்வார் தங்கள் நாட்டில் நுழைவதை அவர்கள் விருப்பமில்லை. ஜப்பான் நாட்டின் குடிநுழைவு சட்டத்தின் படி, அவர்களால் யாரை வேண்டுமானாலும் தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரம் உள்ளது” என்று தெரிவித்தார்.
தான் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு விஸ்மா புத்ராவின் ‘2013 அறிக்கை’ தான் காரணம் என்று அன்வார் குற்றம் சாட்டிய பிறகு, ஜப்பானில் உள்ள மலேசியப் பிரதிநிதி குடிநுழைவுத்துறையிடம் கேட்டு, இந்த விளக்கத்தைப் பெற்றதாக அனீபா நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.