Home நாடு அன்வார் மீதான அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் – பிகேஆர் வலியுறுத்து

அன்வார் மீதான அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் – பிகேஆர் வலியுறுத்து

571
0
SHARE
Ad

latheefaகோலாலம்பூர், ஜன 20 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு ஜப்பான் நாட்டில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கம் அன்வார் பற்றிய அறிக்கை ஒன்றை ஜப்பானுக்கு அனுப்பியுள்ளதால், விமான நிலையத்தில் அன்வாரை அந்நாட்டு குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டுள்ளனர். பின்னர் அந்நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ள தகவலை தெரிவித்துள்ளனர் என்று பிகேஆர் மனித உரிமை மற்றும் சட்ட விவகாரங்கள் பிரிவுத் தலைவர் லத்தீபா கோயா (படம்) தெரிவித்தார்.

இது குறித்து லத்தீபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்வாருக்கு ஜப்பானில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடைக்கு காரணமான ‘அந்த அறிக்கை’ குறித்து மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சு விளக்கமளிக்க வேண்டும்.  பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்த விவகாரத்தில் தலையிட்டு அன்வாரின் தடையை விலக்கி, அவருக்கு ஜப்பான் அரசாங்கம் முழு அனுமதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று காலை 6.45 மணியளவில் நாரிட்டா அனைத்துலக விமான நிலையத்தில் தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக அன்வார் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

முதலில் 1999 ஓரினப்புணர்ச்சி வழக்கு சம்பந்தமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய குடிநுழைவுத்துறை அதிகாரிகள், பின்னர் 2013 ஆம் ஆண்டு அறிக்கையின் படி தடுத்து நிறுத்துவதாகக் கூறினர் என்றும் அன்வார் குறிப்பிட்டிருந்தார்.