Home நாடு அன்வார் ஜப்பானில் நுழையத் தடை!

அன்வார் ஜப்பானில் நுழையத் தடை!

791
0
SHARE
Ad

anwarபெட்டாலிங் ஜெயா, ஜன 20 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு ஜப்பான் நாட்டில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 6.45 மணியளவில் நாரிட்டா அனைத்துலக விமான நிலையத்தில் தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக அன்வார் தெரிவித்தார்.

கடந்த 1999 ல் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை  காரணமாக தடுத்து நிறுத்துவதாக ஜப்பான் குடிநுழைவு அதிகாரிகள் தெரிவித்தனர் என்றும் அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

“இது சரியான காரணம் இல்லை என்று அவர்களிடம் கூறினேன். காரணம் இதற்கு முன்பு 2006, 2009, 2012 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை டோக்கியோவிற்கு சென்றேன். ஆனால் அவர்கள் 2013 ஆம் அறிக்கையின் படி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறினர்” என்று அன்வார் தனது பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ‘2013 அறிக்கை’ என்ன என்பதை மலேசிய வெளியுறவு அமைச்சு தான் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

இஸ்லாமின் ஜனநாயகம் குறித்து பேச, நிப்பான் அறக்கட்டளையின் தலைவர் யோஹெய் சசகவா தன்னை அழைத்ததன் பேரில் தான் டோக்கியோ சென்றதாகவும் அன்வார் கூறினார்.