Home Featured இந்தியா சுனந்தா புஷ்கரைக் கொன்ற அந்த விஷம் – எய்ம்ஸ் புதிய அறிக்கை!

சுனந்தா புஷ்கரைக் கொன்ற அந்த விஷம் – எய்ம்ஸ் புதிய அறிக்கை!

1104
0
SHARE
Ad

sunanda1புது டெல்லி – காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்திற்கு மன அழுத்தத்தைத் குறைக்கும் ‘ஆல்ப்ராக்ஸ்’ (Alprax) மாத்திரை அதிகப்படியாக எடுத்துக் கொண்டது தான் காரணம் என்று எய்ம்சின் ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இன்று எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுனனதாவின் மண்ணீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப் பகுதி, இரத்த மாதிரி. அதே போல் அவரின் ஆடை, படுக்கை விரிப்பு ஆகியவற்றை சோதனை செய்ததில், அவர், மன அழுத்தத்தைத் குறைக்கும் ‘ஆல்ப்ராக்ஸ்’ (Alprax) மாத்திரை அதிகப்படியாக (27 மாத்திரைகள்) எடுத்துக் கொண்டது தெரிய வந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லி காவல்துறை ஆணையர் வெளியிட்ட தகவலில், சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானதல்ல என்று கூறியிருந்தார். மேலும், இந்தக் கூற்று, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுனந்தாவின் உள்ளுறுப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அடிப்படையில், எப்பிஐ (FBI)-ன் ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது என்றும் கூறியிருந்தார்.