Home இந்தியா சஷி தரூர் – மல்லிகார்ஜூன் கார்கே காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டி

சஷி தரூர் – மல்லிகார்ஜூன் கார்கே காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டி

692
0
SHARE
Ad

புதுடில்லி : நடைபெறவிருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் இருமுனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.

கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சஷி தரூர் (படம்) அடுத்த காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன் கார்கேயும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

சஷி தரூர் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒப்புதல் அளித்துவிட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரசில் வாரிசு அரசியல் பின்பற்றப்படுகிறது என பாஜக கடுமையானச் சாடல்களைத் தொடர்ந்து வரும் வேளையில், மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க, எவ்வளவோ வற்புறுத்தப்பட்டும் ராகுல் காந்தி மறுத்து விட்டார்.

தற்போது கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரைக்குமான ஒற்றுமை நடைப் பயணத்தை ராகுல் மேற்கொண்டிருக்கிறார்.

கார்கேயின் போட்டி குறித்து கருத்துரைத்த சஷி தரூர் காங்கிரஸ் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வரும் ஆற்றல் அவருக்கு இல்லை எனச் சாடியுள்ளார்.

மற்றொரு போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலோட் காங்கிரஸ் தலைவருக்கான போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.