Home இந்தியா அவதூறு வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் – பிரேமலதா விஜயகாந்த்

அவதூறு வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் – பிரேமலதா விஜயகாந்த்

566
0
SHARE
Ad

013d2c69-60b4-4180-b47a-32168711ce0a_S_secvpfசென்னை, பிப் 11 – தன் மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறு வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தே.மு.தி.க மாநாட்டில் முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளை தவறாகப் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை சட்டப்படி சந்திப்பேன். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? தனித்து போட்டியிடுவதா? என்பது பற்றியும், கூட்டணி அமைத்தால் யாருடன் கூட்டணி என்பது பற்றியும் விஜயகாந்த் அறிவிப்பார். ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்த நரேந்திரமோடிக்கு தான் தகுதி இருப்பதாக இல.கணேசன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்துள்ளார்.