Home தொழில் நுட்பம் மலிவு விலை ஆண்டிராய்டு திறன்பேசி தயாரிப்பில் நோக்கியா!

மலிவு விலை ஆண்டிராய்டு திறன்பேசி தயாரிப்பில் நோக்கியா!

658
0
SHARE
Ad

nokia-android-phone-concept-490x268பிப்ரவரி 11 -நோக்கியா நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கொண்டிருந்த ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதால், கூகுள் ஆண்டிராய்டு நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலை திறன்பேசியை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வகை ஆண்டிராய்டு திறன்பேசி, சந்தையில் புதிதாக மக்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டாலும், கூகுள், ஆண்டிராய்டின் சில சிறப்பு அம்சங்கள் இருக்காது என்றும் கூறப்படுகின்றது.

சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஆண்டிராய்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில்,நோக்கியா நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்ட திறன்பேசிகள் அதிக அளவு வரவேற்பை பெறவில்லை.

#TamilSchoolmychoice

கடந்த வருடத்தில் உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட செல்பேசிகளில், 79% திறன்பேசிகள் ஆண்டிராய்டு இயங்குதளத்தையும், 15% ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்தையும், 4 % மட்டுமே விண்டோஸ் இயங்குதளத்தையும் கொண்டிருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.