வாஷிங்டன்,பிப் 11 – நாட்டில் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய உள்நாட்டு கருவிகளை உபயோக படுத்த இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மானியம் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் இந்தியா உலக வர்த்தக சபையின் விதிகளை மீறிவிட்டதாக அமெரிக்கா வர்த்தகதுறை அதிகாரி மிச்சேல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்த அறிவிப்பினால் அமெரிக்காவின் உற்பத்திகருவிகளின் ஏற்றுமதி குறைந்துவிடும் என்றும் இதனால் தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக 60 நாட்களில் இரு நாடுகளும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உலகவர்த்தக அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.