அக்கூட்டத்தில் பேசிய சந்திரகுமார், தேமுதிக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிலுள்ள 23 பேரின் பரிந்துரையின் பேரில் தான் கட்சியிலிருந்து யாரையும் நீக்கம் செய்ய முடியும் என்றும், அக்குழுவைச் சேர்ந்த 5 பேரு தன்னுடன் இருக்கும் போது, கட்சியிலிருந்து தங்களை நீக்கி விஜயகாந்த் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் கூட்டணியில் தேமுதிக இணைவதற்கு முக்கியக் காரணம் பிரேமலதா தான் என்றும், அவர் கட்டுப்பாட்டில் தான் கட்சியே உள்ளதாகவும் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
பிரேமலதாவால் தான் தேமுதிக பாதாளத்திற்குச் சென்றுவிட்டது என்று குறிப்பிட்டுள்ள சந்திரகுமார், மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்டால் எந்த தொகுதியிலும் தேமுதிகவால் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற முடியாது என்றும் சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, சென்னை கோயம்பேடு கட்சிஅலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ஆதரவாளர்களுடன் தற்ப்ஆலோசனை நடத்தி வ ருகிறார்.