Home Featured தமிழ் நாடு தமிழக சட்டமன்றத் தேர்தல்: 10 அதிமுக வேட்பாளர்கள் திடீர் மாற்றம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல்: 10 அதிமுக வேட்பாளர்கள் திடீர் மாற்றம்!

862
0
SHARE
Ad

jayalalithaசென்னை – தமிழகம் மற்றும் புதுவை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்களில் 10 பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். மேட்டூர், பூம்புகார், மன்னார்குடி, வேதாரண்யம் உட்பட பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

மேட்டூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செம்மலை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், சென்னை தியாகராயர் நகர் தொகுதியில் பி.சத்தியநாராயணன், எஸ்.காமராஜ் மன்னார்குடியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பூம்புகார் தொகுதியில் பவுன்ராஜ், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் முருகு மாறன், நாகர்கோவில் தொகுதியில் நாஞ்சில் முருகேசன் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

புதுச்சேரி மாநிலத்திலும் 3 தொகுதிகளில் ஏற்கனவே அறிவித்த வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றியுள்ளார். திருபுவனையில் சங்கர், திருநள்ளாறில் முருகைய்யன், காரைக்கால் தெற்கில் கே.ஏ.யு.அசனா போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.