Home Featured தமிழ் நாடு கவனிக்கப்படும் அதிமுக வேட்பாளர்கள் # 3 – சி.பொன்னையன் (சைதாப்பேட்டை) – அனுபவம் மீண்டும் திரும்புகின்றது!

கவனிக்கப்படும் அதிமுக வேட்பாளர்கள் # 3 – சி.பொன்னையன் (சைதாப்பேட்டை) – அனுபவம் மீண்டும் திரும்புகின்றது!

773
0
SHARE
Ad

சென்னை – அதிமுகவில் ஆதி காலம் தொட்டு – எம்ஜிஆர் காலத்திலிருந்து – கட்சிக்கு விசுவாசமாக இருந்து வரும் மூத்த தலைவர்களை, அனுபவசாலிகளை ஜெயலலிதா கழட்டி விட்டு விடுகின்றார் – முறையாக அவர்களின் முதிர்ந்த அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது எப்போதும் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு.

அதற்கு நேர் எதிர்மாறாக, இந்த முறை ஜெயலலிதா களமிறக்கியுள்ள மூத்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன். எம்ஜிஆர் காலத்திலேயே அமைச்சராக வீற்றிருந்தவர்.

இடையில் ஜெயலலிதாவுடன் பிணக்கு இருந்தாலும், அந்த மோதல்களை கண்ணியமாகக் கையாண்டு வந்திருப்பவர்.

#TamilSchoolmychoice

Ponnaiyan-Jayalalithaaநிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவுடன் பொன்னையன்….

இடைப்பட்ட காலத்தில் பொன்னையனுக்கு எந்தவித பொறுப்பும் கட்சியில் கொடுக்காமல் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தாலும், அதைப் பற்றி பெரிதாக எதுவும் விமர்சனம் செய்யாமல் அமைதி காத்து வந்தது இப்போது பொன்னையனுக்கு சாதகமாக முடிந்திருக்கிறது.

தமிழக நிதி அமைச்சராக இருந்த அவரது அனுபவம் –  அறிவாற்றல் – அமைதியான பண்பு – கொங்கு வேளாளர் சமூக செல்வாக்கு – என சில கூடுதல் சாதக அம்சங்களையும் பொன்னையன் கொண்டிருக்கின்றார்.

சென்னையில் திமுகவின் கோட்டைகளுள் ஒன்றாகக் கருதப்படும் சைதாப்பேட்டை தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கின்றார் பொன்னையன். தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ள தொகுதி இது.

வழக்கமாக கொங்கு மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சட்டமன்றத்திலிருந்து போட்டியிட்டு வென்று வந்துள்ள பொன்னையன், இந்த முறை ஒரு மாறுதலுக்காக சென்னையிலேயே நிறுத்தப்பட்டுள்ளார்.

வெள்ளப் பிரச்சனையால் கடுமையான போட்டிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சென்னையில் பொன்னையன் நிறுத்தப்பட்டுள்ளது மூத்த, அனுபவசாலிகளைக் கொண்டு வெள்ளத்தினால் எழுந்துள்ள பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கான ஜெயலலிதாவின் அரசியல் வியூகமாகவும் இருக்கலாம்.

அதிமுக அடுத்து ஆட்சி அமைத்தால், பொன்னையனும் சைதாப்பேட்டையில் வென்று வந்தால் – அமைச்சர் பொறுப்பை அவர் அலங்கரிக்கக் கூடிய வாய்ப்பும் அதிகம்!

-செல்லியல் தொகுப்பு