Home Featured தமிழ் நாடு ‘ஜெயலலிதாவின் வாரிசு சசிகலா’ – பொன்னையன்

‘ஜெயலலிதாவின் வாரிசு சசிகலா’ – பொன்னையன்

904
0
SHARE
Ad

maxresdefaultசென்னை – அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற பொன்னையன் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் வாரிசாகவே சசிகலாவைப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சசிகலாவைப் பொதுச்செயலாளராகக் கொண்டு வர கட்சி விதிகள் தளர்த்தப்படும் என்றும் பொன்னையன் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவதை எதிர்த்து மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.