Home Featured நாடு டிசம்பர் 18-ல் நாடெங்கிலும் மின்தடையா?

டிசம்பர் 18-ல் நாடெங்கிலும் மின்தடையா?

869
0
SHARE
Ad

tnbகோலாலம்பூர் – வரும் டிசம்பர் 18-ம் தேதி நாடெங்கிலும் மின்தடை ஏற்படவுள்ளதாக பேஸ்புக்கில் பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என தேசிய மின்வாரியம் (Tenaga Nasional Berhad) தெரிவித்துள்ளது.

நட்பு ஊடகங்களில் பரவி வரும் அது போன்ற போலியான தகவல்களை நம்பி யாரும் பகிர வேண்டாம் என்றும், அதனால் வீண் குழப்பங்கள் ஏற்படும் என்றும் அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகி டத்தோ இர் மொகமட் அமினுடின் மொகமட் அமின் தெரிவித்துள்ளார்.

டிஎன்பி-ன் பராமரிப்புப் பணிகள் மற்றும் அதன் தேதிகளை அறிந்து கொள்ள https://www.tnb.com.my/residential/power-alert/ இணையதளத்தைப் பார்வையிடும் படியும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.