Home Featured கலையுலகம் டிசம்பர் 23-ம் தேதி ‘கத்திச்சண்டை’ வெளியாகிறது!

டிசம்பர் 23-ம் தேதி ‘கத்திச்சண்டை’ வெளியாகிறது!

886
0
SHARE
Ad

kathisandaiசென்னை – விஷால், தமன்னா, வடிவேலு நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த கத்திச்சண்டை திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே வந்தது.

இறுதியாகப் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டிசம்பர் 23-ம் தேதி வெளியாக இருந்த சூர்யாவின் ‘சிங்கம் 3’ திரைப்படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றிருப்பதால், அதிருப்தி அடைந்துள்ள படக்குழு அதனை சரி செய்து யு சான்றிதழ் பெற முயற்சி செய்து வருகின்றது.

#TamilSchoolmychoice

இதனையறிந்த ‘கத்திச்சண்டை’ படக்குழு, பொங்கலுக்கு வெளியாக இருந்த திரைப்படத்தை வரும் டிசம்பர் 23-ம் தேதியே வெளியீடு செய்வதாக அறிவித்துள்ளது.

பொங்கலுக்கு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பைரவா’ வெளியாவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.