Home இந்தியா பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நலம் தேறி வருகிறார்

பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நலம் தேறி வருகிறார்

898
0
SHARE
Ad

சென்னை : மலேசியத் தொலைக்காட்சி இரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான முகம் – பெயர் பாரதி பாஸ்கர்.

சன் தொலைக்காட்சியில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா தலைமையில் அரங்கேறும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்பவர்.

மற்றொரு பட்டிமன்றப் பேச்சாளரான ராஜாவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளையும் படைத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளியேறும் கல்யாண மாலை போன்ற நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கு பெற்று உரையாற்றுவார் பாரதி பாஸ்கர்.

வங்கியில் பணியாற்றிக் கொண்டே பகுதி நேரத்தில் தனது பட்டிமன்றத் தமிழ்ப் பணியை ஆற்றி வந்தவர் பாரதி பாஸ்கர். அண்மையில் திடீரென உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியால் அவரின் இரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

பரிசோதனைகளை மேற்கொண்டதில் பாரதி பாஸ்கரின் மூளைக்கு செல்லும் இரத்தக் குழாயில் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலைமையைக் குணப்படுத்துவதற்கான முயற்சிகளை வெற்றிகரமாக மருத்துவர்கள் முடித்துள்ளனர் என தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவர்  குணமடைந்து வருவதாகவும், கூடிய விரைவில் இல்லம் திரும்பலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

அவர் சீக்கிரமே உடல் நலமடைய வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.