நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டத்திற்குப் பின்னர் இஸ்மாயில் சாப்ரி பிரதமராக நியமிக்கப்படுவதாக மாமன்னர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து இஸ்மாயில் சாப்ரி இன்று பிரதமராக பதவியேற்றிருக்கிறார்.
இனி அடுத்த வாரத்தில் தனது புதிய அமைச்சரவையைப் பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்பர்.
Comments