Home உலகம் விண்வெளியில் சுற்றிவரும் ஐசான் வால்நட்சத்திரத்தின் அற்புத காட்சிகள் வெளியீடு

விண்வெளியில் சுற்றிவரும் ஐசான் வால்நட்சத்திரத்தின் அற்புத காட்சிகள் வெளியீடு

434
0
SHARE
Ad

ison 300-200

லண்டன், நவ 20 – அண்டவெளியில் சுற்றிவரும் வால்நட்சத்திரம் ஐசான் கடந்த 1-ம் தேதி முதல் இரண்டு வாரங்களாக மிகவும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. இதனால் வால்நட்சத்திரத்தின் குளிர்ந்த மையப்பகுதியில் இருந்து மிகப்பெரிய வாயு மற்றும் தூசுக்களை அது சிதறடித்து பிரகாசித்துக் கொண்டிருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி அது தற்போது வினோதமான தோற்றத்தை காட்டிக் கொண்டிருக்கவில்லை. தற்போது சூரியனை நோக்கி பிரகாசித்துக் கொண்டிருக்கும் இந்த வால்நட்சத்திரம் வரும் 28-ம் தேதி சூரியனுக்கு மிக நெருக்கமாக செல்லும் என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஐசான் வால்நட்சத்திரத்தின் மையப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருவதால் அது சூரியனுக்கு நெருக்கமாக செல்கிறபோது அது அழிந்துவிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒரு வேளை இதிலிருந்து தப்பித்துவிட்டால், அது ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பூட்டும் காட்சிகளை அளித்து உற்சாகப்படுத்தும்.

ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான இலக்காக உள்ள இந்த வால்நட்சத்திரத்தின் அற்புதமான காட்சிகள் வரும் 23-ம் தேதி பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும்.