Home இந்தியா ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது

607
0
SHARE
Ad

germa pm 300-200

புதுடெல்லி, நவம்பர்  20- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் சர்வதேச அமைதி விருது ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. உலகளவில் அமைதிக்காகவும், ஆயுத கைவிடலுக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிற தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது, ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலுக்கு (வயது 59) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நெருக்கடியான காலக்கட்டத்தில் உலகப்பொருளாதார ஸ்திர நிலைமைக்காகவும், உலக அமைதிக்காகவும், ஆயுதக் கைவிடலுக்காகவும் ஏஞ்சலா பாடுபட்டதை கவுரவம் செய்து இந்த விருது வழங்குவதாக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை அறிவித்துள்ளது.

ஜெர்மனியின் முதல் பெண் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி பெயரிலான விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் ஜெர்மனி நெருக்கமான நல்லுறவை பராமரித்து வருகிறது.