Home இந்தியா விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலை வெள்ளோட்டத்தின் போதே அமெரிக்கா உளவு பார்த்தது?

விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலை வெள்ளோட்டத்தின் போதே அமெரிக்கா உளவு பார்த்தது?

609
0
SHARE
Ad

Tamil-Daily-News_36574518681

புதுடெல்லி, நவம்பர் 20- இந்தியா புதிதாக வாங்கியுள்ள ‘விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி போர்க் கப்பலை வெள்ளோட்டத்தின் போதே அமெரிக்கா உளவு பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு ரஷ்யா புதுப்பித்து வழங்கிய விமான தாங்கி போர்க்கப்பலான விக்ரமாதித்யா கடற்படையில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டது. இந்த கப்பலின் பலத்தை அறிய இந்தியாவின் நட்பு நாடுகளும், எதிரி நாடுகளும் மிகவும் ஆர்வமாக உள்ளன.

இந்த கப்பலின் வெள்ளோட்டம் ரஷ்யாவின் வெண்கடல் பகுதியில் நடந்தபோது, அமெரிக்காவின் பி-3சி ரக உளவு விமானம் கப்பல் அருகே பறந்து சென்றுள்ளது.

#TamilSchoolmychoice

நேட்டோ படையில் இடம் பெற்றுள்ள இந்த விமானம், விக்ரமாதித்யா கப்பலை உளவு பார்த்திருக்கலாம் என கூறப்படுகிறது. அப்போது விக்ரமாதித்யா கப்பல் ரஷ்ய கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது இந்தியா வந்து கொண்டிருக்கும் விக்ரமாதித்யாவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் எதுவும் இல்லை. அதற்கு பாதுகாப்பாக 2 இந்திய போர்க் கப்பல்கள் வருகின்றன. அதில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன. உளவு பார்க்கும் முயற்சியை இந்த கப்பல்கள் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.