Home நாடு வெளிநாட்டவர் கைகளில் தொலைந்து போன அடையாள அட்டைகள்!

வெளிநாட்டவர் கைகளில் தொலைந்து போன அடையாள அட்டைகள்!

462
0
SHARE
Ad

mole-RCI-SABAH-2கோலாலம்பூர், நவ 20 – தொலைபோன பல அடையாள அட்டைகள் வெளிநாட்டினர்களின் கையில் இருப்பதாகவும், அவைகளில் பல இடைத்தரகர்களால் விற்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து துணை உள்துறை அமைச்சர் டத்தோ வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் கூறுகையில், அலட்சியத்தினால் தொலைந்து போன அடையாள அட்டைகளை வெளிநாட்டினர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை அமைச்சரவை மறுக்கவில்லை. அதே நேரத்தில் சில அடையாள அட்டைகள் திருடப்பட்டு அவை விற்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,“கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் அடையாள அட்டைகள் காணாமல் போவது தொடர்ந்து வருகின்றது. இவ்வருடம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை மொத்தம் 565,157 அடையாள அட்டைகள் காணாமல் போயுள்ளன.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம்” என்றும் ஜுனைடி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில், தகுதியுள்ள வெளிநாட்டினருக்கு குடியுரிமையுடன் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன என்பதையும் ஜுனைடி மறுத்தார்.