கோலாலம்பூர்: போலி மைகாட் பயன்படுத்தும் புலம்பெயர்ந்தோர் தப்பிக்க முடியாது, ஏனெனில் அதிகாரிகள் அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது தொடங்கப்பட்ட ‘ஒப்ஸ் பெந்தேங்கின்’ கீழ், போலி மைகாட் பயன்படுத்துபவர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு எதிரான அமலாக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
“நான் சொன்னது போல், சட்டவிரோத குடியேறிகளைக் கைது செய்வதற்கான எங்கள் நடவடிக்கையில், போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைவதை சட்டப்பூர்வமாக்க முயன்றவர்களைத் தகர்த்தெறிவதும் அடங்கும்.
“ஒப்ஸ் பெந்தேங் தொடரும், நகல் செய்யப்பட்ட (அடையாள) அட்டைகள் மற்றும் அதைப் பயன்படுத்தி யாராவது பிடிபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
போலி மைகாட் பயன்படுத்தி தொழிற்சாலைகளில் வேலைகளுக்கு விண்ணப்பிக்க முயன்ற எட்டு இந்தோனிசியர்களை காவல் துறையினர் கைது செய்ததாக நேற்று செய்தி வெளியானது.