Home One Line P1 கொவிட்19: 33 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்

கொவிட்19: 33 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்

486
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,402-ஆக உயர்ந்தது.

இன்று ஒருவர் மரணமுற்ற நிலையில் நாட்டின் மரண எண்ணிக்கை 119-ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

புதிதாக அடையாளம் காணப்பட்ட 33 பாதிப்புகளில், 16 சம்பவங்கள் இறக்குமதி சம்பவங்களாகும். 14 பேர் உள்ளூரில் தொற்று கண்ட வெளிநாட்டினர். மூவர் மலேசியர்.

இன்று 103 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,168-ஆக உயர்ந்தது.

1,115 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.