Home நாடு சாலை விபத்து: டாக்டர் சுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதி!

சாலை விபத்து: டாக்டர் சுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதி!

464
0
SHARE
Ad

Dr S. Subramaniamமலாக்கா, நவ 21 – சுகாதாரத்துறை அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பயணம் செய்த கார் நேற்றிரவு 8.30 மணியளவில் மலாக்கா அருகே விபத்திற்குள்ளானது. இதில் லேசான காயங்களுடன் சுப்ரமணியம் உயிர் தப்பினார்.

நேற்று இரவு மலாக்காவில் நடைபெற்ற மஇகா கூட்டமொன்றில் கலந்து கொள்ள புத்ரஜெயாவில் இருந்து தனது புரோட்டான் பெர்டானா காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 220.7 வது கிலோமீட்டரில் விபத்து நிகழ்ந்தது.

இதில் சுப்ரமணியத்தின் கழுத்து மற்றும் காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக அலோர்காஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் செய்த பின்னர், தீவிர சிகிக்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

இவ்விபத்தில் சுப்ராவின் மெய்க்காப்பாளர் சுல்கிப்ளி அப்துல் வஹாப்புக்கு பலத்த காயங்களும், காரோட்டிக்கு லேசான காயங்களும் ஏற்பட்டு இருவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.