Home கலை உலகம் ஒரே படத்தில் 3 மலேசிய கதாநாயகிகள் அறிமுகம்

ஒரே படத்தில் 3 மலேசிய கதாநாயகிகள் அறிமுகம்

638
0
SHARE
Ad

Love_in_Malaysia_Movie_Stills002

கோலாலம்பூர், நவம்பர் 22- ஜெய் ஆகாஷ் இயக்கி நடிக்கும் படம் லவ் இன் மலேசியா. இதில் அவர் வில்லன் கதாநாயகன் என இரண்டு வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சங்கீதா, ரம்யா, சங்தீப்தி என 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மூவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள்.

மலேசிய சுதந்திர தினமான ஆகஸ்ட் 31 அன்று தீவிரவாதிகள் மலேசியாவின் பல்வேறு இடங்களில் குண்டு வைத்து தகர்க்க திட்டமிடுகிறார்கள்.

#TamilSchoolmychoice

மலேசிய அரசாங்கம், மலேசியாவுக்கு சுற்றுலா வந்துள்ள இந்திய காவல் அதிகாரியான ஜெய் ஆகாஷிடம் குண்டுகளை அகற்றி தீவிரவாதிகளை பிடிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறதாம். அதை அவர் செவ்வனே செய்து முடித்து மலேசிய நாட்டின் கதாநாயகன் ஆகிறார்.

மலேசியா நாடளுமன்றம், புத்ரஜெயா உள்பட மலேசியாவைச் சுற்றி சுற்றி படத்தை முடித்து விட்டார்கள். இரண்டு நாடுகளிலும் ஜனவரி மாதம்வெளிவரும் என நம்பப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக வலம் வரலாம் என்ற கனவில் இருக்கிறார்கள் 3 நாயகிகளும்.