Home இந்தியா 5 ஆண்டு சிறை தண்டனை: லல்லுபிரசாத் ஜாமீன் கேட்டு உச்ச நீதி மன்றத்தில் மனு

5 ஆண்டு சிறை தண்டனை: லல்லுபிரசாத் ஜாமீன் கேட்டு உச்ச நீதி மன்றத்தில் மனு

562
0
SHARE
Ad

laalu

புதுடெல்லி, நவம்பர் 25 – மாட்டுத்தீவன வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லல்லுபிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு  நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30–ம் தேதி இந்த தீர்ப்பை வழங்கியது.

இதைத்தொடர்ந்து லல்லுபிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள பிர்கா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உச்ச நீதி மன்றம் வழங்கி இருந்த தீர்ப்பின்படி அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

சிறையில் இருக்கும் பீகார் முன்னாள் முதல் மந்திரியான லல்லு ஜாமீன் கேட்டு ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றத்தில் மனு செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு கடந்த அக்டோபர் 31–ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் லல்லு பிரசாத் ஜாமீன் கேட்டு உச்ச நீதி மன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

வருகிற 29–ம் தேதி இந்த மனு மீது  உச்ச நீதி மன்றம் விசாரணை நடத்துகிறது.