Home Featured இந்தியா ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் காற்சட்டைக்கு மாற என் மனைவிதான் காரணம் – லாலு பிரசாத் கேலி!

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் காற்சட்டைக்கு மாற என் மனைவிதான் காரணம் – லாலு பிரசாத் கேலி!

707
0
SHARE
Ad

laluபாட்னா – என் மனைவி ராப்ரி தேவி கேலி செய்ததால்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது சீருடையை மாற்றிவிட்டது என்று பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனக்கே உரிய பாணியில் கிண்டல் செய்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 90 வருடங்களாக, ஒரே மாதிரியான சீருடையை பயன்படுத்தி வருகிறது. வெள்ளைக்கார போலீசார் அணியும் காக்கி அரைக்காற் சட்டையை போன்ற ஒரு காற் சட்டை மற்றும் வெள்ளை சட்டை அணிவது ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காக்கி அரைக்காற் சட்டைக்கு பதிலாக இனிமேல் அரக்கு வண்ண முழுக்காற் சட்டைஅணிவது என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் குறித்து லாலு தனக்கே உரித்தான பாணியில் கூறியதாவது:

#TamilSchoolmychoice

ஆர்.எஸ்.எஸ் தனது அரைக்காற் சட்டையில் இருந்து முழுக்காற் சட்டைக்கு மாற எனது மனைவி ராப்ரி தேவியின் கிண்டல் பேச்சுதான் காரணம். எப்படித்தான் வயதானவர்களும் காற் சட்டை போட்டுக்கொண்டு பொது இடங்களில் சுற்றுகிறார்களோ தெரியவில்லை…. என லல்லு மனைவி ராப்ரி கேலி செய்திருந்தார்.

இதன்பிறகுதான் ஆர்.எஸ்.எஸ் தனது சீருடையை மாற்றியுள்ளது. இப்போது அவர்கள் ஆட்சி நடப்பதால் இவ்வாறு செய்துள்ளனர். ஆட்சி மாறியதும், பழையபடி காற் சட்டை கலாசாரத்திற்கே அவர்களை அனுப்பி வைத்துவிடலாம் என லாலு தெரிவித்துள்ளார். இவ்வாறு லல்லு பிரஷாத் கூறியுள்ளது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.