Home அரசியல் பாஸ் தலைவருடன் நஜிப் விரைவில் பேச்சுவார்த்தை!

பாஸ் தலைவருடன் நஜிப் விரைவில் பேச்சுவார்த்தை!

547
0
SHARE
Ad

27732_najib3கோலாலம்பூர், நவ 25 – பாஸ் கட்சியின் பரிந்துரைகள் தொடர்பாக கலந்துரையாட அம்னோ தலைவரும், பிரதமருமான நஜிப் துன் ரசாக், கிளந்தான் மாநில மந்திரி பெசாரான அகமட் யாகோப்பை சந்தித்துப் பேசவுள்ளார்.

சென்ற வார இறுதியில் பாஸ் மாநாட்டில் இச்சந்திப்பு குறித்து விடுக்கப்பட்ட அழைப்பிற்கு பதிலளிக்கும் விதமாக, பாஸ் தலைவரை விரைவில் சந்திக்கத் தான் தயாராகி வருவதாக நஜிப் இன்று தெரிவித்தார்.

“நாங்கள் வெளிப்படையானவர்கள். ஆனால் அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம். இது குறித்து பாஸ் கட்சியிடம் மேலும் பல விளக்கங்களைக் கேட்டிருக்கிறோம்” என்று நஜிப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், கிளந்தான் மந்திரி பெசாரை சந்திக்க தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் நஜிப் குறிப்பிட்டார்.

பாஸ் தலைவரான அப்துல் ஹாடி அவாங், இஸ்லாமிய சட்டங்களையும், போதனைகளையும் அம்னோவுடன் ஒன்றிணைக்கும் திட்டத்தை ஏற்கனவே வலியுறுத்தினார். ஆனால் மத்திய அரசாங்கத்தில் இயற்றப்பட்ட மதச்சார்பின்மை கொள்கையை பாதிக்கும் என்று அப்போது அம்னோ அத்திட்டத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

கிளந்தான் அரசாங்கம் கடந்த 1993 ஆம் ஆண்டு ஹுடுட் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் மத்திய அரசாங்கம் தங்கள் கொள்கைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதால் அத்திட்டம் அப்போது கைவிடப்பட்டது.