Home இந்தியா அவதூறு வழக்கு: 250 வழக்கறிஞர்களுடன் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்

அவதூறு வழக்கு: 250 வழக்கறிஞர்களுடன் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்

601
0
SHARE
Ad

1fd702e2-cfb9-4cc2-b920-dbfd8d653702_S_secvpf

திண்டுக்கல், நவம்பர் 25– திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல் அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது திண்டுக்கல் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் வந்தார்.

#TamilSchoolmychoice

இன்று காலை 10.45 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் நீதிபதி பாலசுந்தரகுமார் முன்னிலையில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வருகிற 6–1–2014 அன்று தள்ளிவைத்து உத்தரவிட்டார். பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டு இருந்த தி.மு.க.வினரை பார்த்து கை அசைத்தார்.

முன்னதாக மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க. தலைமைக்கழக வழக்கறிஞர்கள் கல்யாணசுந்தரம், ரவிசந்திரன், ஆர்.எஸ்.பாரதி, கிரிராஜன், இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், மற்றும் தேனி, திண்டுக்கல், கரூர், மதுரையை சேர்ந்த 250 வழக்கறிஜர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

நீதிமன்றத்தில் ஆஜரான மு.க.ஸ்டாலினை வரவேற்க மாவட்ட நீதிமன்றம் முன்பு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் காவல்துறையினர் மு.க.ஸ்டாலினை சுற்றி வளையம்போல பாதுகாப்பு அளித்து அவரை பத்திரமாக மாவட்ட நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர்.